Thursday, July 31, 2008
நாளை நீ இறக்க போகிறாய்...
முன் குறிப்பு: மென்மையான மனம் உடையவர்கள் இந்தக் கவிதையை படிக்க வேண்டாம். சிலர் பயமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
வாசகனே ...
என் பிரிய வாசகனே...
நீ தான்
நீயே தான்
இந்தக் கவிதையை படித்த பாவத்திற்காகவோ
வேறென்ன காரணத்திற்காகவோ
நாளை நீ இறக்க போகிறாய்
விபத்தாலோ...
கொலையாலோ...
நோயாலோ...
அல்லது இயற்கையாகவோ
அது நிகழப் போவது
வெகு நிச்சயம்...
மின்சாரமோ...
நெருப்போ...
மண்ணோ...
உன் உடலை
அணு அணுவாய்
அணுவாக்கி
அணுவற்றதாய்
ஆக்கும்...
அதுவரை
என்ன செய்வதாய்
உத்தேசம்?
உன்னை நம்பினோரை
இறைவனிடம்
ஒப்படை...
தந்தையிடம் போ
உயிர் கொடுத்த நெஞ்சத்தை
மனதார தழுவு
மகிழட்டும்...
தாயிடம் போ
உடல் சுமந்த வயிற்றை
உளமார தொடு
குளிரட்டும்...
பகைமை மறந்து
மனிதர்களை தழுவு
யாவரும் உனக்காக
கண்ணீர் சிந்தட்டும்...
மாங்கன்றோ
இளங்கன்றோ
நட்டு வை
உன் பேர் சொல்லட்டும்...
கடமையை செய்கையில்
உயிர் துறப்பதே உத்தமம்
தொழிலிடம் செல்...
பயன்விடுத்து
தொழில் நடத்து...
அந்த நாளை
நாளையோ
வருடங்கள் கழிந்தோ
வரலாம்....
அதனாலென்ன...?
அப்படியே
வாழ்...!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
enna kodumai vaasikavee payamaai ulathu
அந்த கவிதையின் நோக்கமே மிரட்டுவது தான். horror திரைப்படங்கள் மாதிரி இது ஒரு horror கவிதை. இருந்தாலும் கவிதையின் இறுதியில் அந்த பயத்தை போக்கியிருக்கிறேனே... கடைசிவரை படிக்கவில்லையா?
நிச்சயமாக விஜய்.
//முன் குறிப்பு: மென்மையான மனம் உடையவர்கள் இந்தக் கவிதையை படிக்க வேண்டாம். //
over build up.
but nice kavithai.
முதலில் நான் அந்த பில்ட் அப்- கொடுக்கவில்லை. ராகினியின் பின்னூட்டத்தை பார்த்து தான்..... :)
இந்தக்கவிதையை ஒவ்வொரு நாளும் நம்பிப்படித்தால் ஒரு பிரச்சனையும் இருக்காது.
ஏனெனில் அனைவரும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்வார்கள்.
Very good lesson for life via a poem.
Who knows what's gonna happen next? (Death or whatever....)
Nice poem.
நன்றி நிரு...:)
Post a Comment