Thursday, July 10, 2008

எழுத்துச் சித்தர்


பாலகுமாரன் அவர்களின் எழுத்து ஆழமானது. அக்கறையானது. அது எந்த ஒரு தந்தையும் தன் பிள்ளைகளிடம் காட்ட வேண்டிய அக்கறை. அந்த அக்கறையால் பயன்பெற்ற லக்ஷக் கணக்கானவர்களில் நானும் ஒருவன். எப்பொழுதெல்லாம் நான் குழப்பத்தில் இருந்தேனோ அப்பொழுதெல்லாம் இவருடைய எழுத்துக்கள் எனக்கு உதவியிருக்கின்றன. இறைவனின் அற்புதங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு இவர் எழுத்துக்கள் எனக்கு உதவிய விதம் சாட்சி. மனதில் ஏதேனும் குழப்பங்கள் இருக்கும், அப்போது இவருடைய நாவல்களில் ஏதோ ஒன்றை எடுத்து படிப்பேன், பார்த்தால் என் குழப்பத்துக்கான தீர்வு அதில் இருக்கும். இது ஒரு முறை இரு முறை அல்ல பற்பல முறை நிகழ்ந்ததுண்டு. இவருக்கு நன்றி சொல்ல என்னால் ஆகாது. பெற்ற கடனை திரும்பி செலுத்த வழியும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இது அமுத சுரபி, எடுக்கத் தான் முடியும் கொடுக்க முடியாது. வேண்டும் என்றால் இப்படி ஏதாவது கிறுக்கலாம்.

யோகியாரின் செல்லப் பிள்ளை
உடையும் வெள்ளை உள்ளமும் வெள்ளை
இறைவனின் புகழை தினமும் பாடி
அழகாக வளர்க்கிறது வெள்ளை தாடி
பெற்ற நன்மைக்கு அளவும் இல்லை
நன்றிகள் சொல்ல வார்த்தையும் இல்லை...!

3 comments:

Manivannan Sadasivam said...

You're absolutely right. Even, i've experienced the same. Balakumaran has shown me light, whenever i'm in dark. The poem (or as you say kirukku)is also nice!

Aruna said...

நானும் பாலகுமாரனின் எழுத்துக்களின் பெரிய ரசிகை.அவர் எழுதி அனுப்பிய பல வருடப் பழைய கடிதத்தை இன்னும் பத்திரப் படுத்தி அவ்வப்போது படித்துப் பார்த்து மகிழ்வதுணடு....
அன்புடன் அருணா

ramesh sadasivam said...

ஓ... அந்த கடிதங்கள்.. அவர் தங்களுக்கு எழுதியவையா?