Sunday, July 6, 2008
கற்றதும் பெற்றதும்
சுஜாதாவின் எழுத்துக்கள் சுவாரஸ்யமானவை. சிந்திக்கும் கலையை அவரிடம் கற்றுக்கொண்டேன். காதலைப் பற்றி கனவுகள் நிறைந்திருந்தவை என் கல்லூரி நாட்கள். இவர் கதைகளில் வரும் கணவனுக்கு மனைவி துரோகம் இழைக்கும் சம்பவங்கள் இந்த கற்பனை பலூன்களை ஊசி நுழைத்து வெடிக்க வைத்தன.[ உ-ம் கற்றதும் பெற்றதும் முதல் பாகத்தில் வரும் "திரை" என்கிற குட்டிக் கதை, தப்பித்தால் தப்பில்லை எனும் குறுநாவல்.] ஆண் பெண் உறவைப் பற்றி ஆழமாக சிந்திக்க இவர் படம்பிடித்து காட்டிய கசப்பான சம்பவங்கள் எனக்கு பெரிதும் உதவின. இவ்வுலகில் நம்பத் தகுந்த உறவு என்பது இறைவனின் உறவு மட்டுமே. மற்ற உறவுகள் நன்றாக அமையலாம் அமையாமலும் போகலாம். அவற்றை பெரிதாக கொண்டாடவும் வேண்டாம், தூற்றி வெறுத்து ஒதுக்கவும் வேண்டாம். திறந்த மனதோடு எவரையும் அணுகுவோம். தரமானவராய் இருப்பின் மகிழ்ச்சியாய் ஏற்றுக் கொள்வோம். இல்லையேல் ஒதுக்கி விட்டு நம் கவனத்தை ஆக்கபூர்வமான திசைகளில் செலுத்துவோம்.
சுஜாதா விகடனில் கற்றதும் பெற்றதும் எழுதிய போது வாசகர்களுக்கு புதிய வகை கவிதைகளை அறிமுகம் செய்வார். ஒரு முறை "க்ளெரிஹ்யூ" என்ற வகை கவிதைகளை அறிமுகப்படுத்தினார். அந்தக் கவிதை வகையின் அம்சங்கள். 1) ஒரு பிரபலத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். 2)நான்கு வரிகளில் இருக்க வேண்டும் 3)முடிந்தால் நகைச்சுவையாக இருக்க வேண்டும். வாசகர்களிடமிருந்து கவிதைகளை வரவேற்றார். நானும் சில பிரபலங்கள் பற்றி கவிதைகள் எழுதி அனுப்பி வைத்தேன். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி நான் எழுதிய கவிதையை பிரசுரித்தார். அவர் பாணியில் சொல்லப் போனால், அவரை பற்றி நான் எழுதிய கவிதையை அவையடக்கம் காரணமாக பிரசுரிக்காமல் விட்டார். அது...
கற்றதும் பெற்றதும்
ஏராளம் சுஜாதா
சேதிகள் சொல்வதில்
தாராளம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//கற்றதும் பெற்றதும்
ஏராளம் சுஜாதா
சேதிகள் சொல்வதில்
தாராளம்//
எதுகை, மோனை நல்லா இருக்கு
அப்பாடா.... ஒண்ணாவது புடிச்சுதே...! ரொம்ப சந்தோஷம். :)
Post a Comment