Sunday, September 21, 2008

மதம் பிடித்த மூடர்கள்.


மதம் மனிதனை பக்குவப்படுத்த வேண்டும். நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டும். எது நீராக இருக்க வேண்டுமோ அதுவே பகைமை தீயை வளர்க்கும் எரிபொருளாகும் அவலம் சோகமானது.

இந்த உலகில் வாழப் போவது கொஞ்ச நாள் தான். அதில் நல்ல உணவு உண்டு, நல்ல இசை ரசித்து, நல்ல உறவுகளுடன் பழகி, நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து இறைவனடி போய் சேரலாம் என சிந்திக்க ஏன் இவர்களால் முடிவதில்லை? தாங்களும் பாவம் செய்து, பிறர் வாழ்க்கையும் நரகமாக்கி இவர்கள் என்ன தான் சாதிக்கப் போகிறார்கள்?

எப்படி தீவிரவாதம் இஸ்லாம் மதத்துக்கு மிகப் பெரிய அவப் பெயரை ஏற்படுத்துகிறதோ அதே போல இந்த வன்முறை நிகழ்ச்சிகள் இந்து மதத்துக்கு அவப் பெயரைத்தான் ஏற்படுத்தும். இது புரியாதவர்கள் தான் இந்து மதத்தை காப்பதாக நினைத்துக் கொண்டு இப்படிப் பட்ட முட்டாள் தனங்களில் ஈடுபடுவார்கள்.

ஓரிஸ்ஸாவிலும் பெங்களூரிலும் கிரிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமைக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான செயல். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

4 comments:

cyclopseven said...

Yes..religion if misunderstood can beget terrorism. True enough life is too short, to be lived amidst skirmishes. Good piece. I dun write tamil, I do read a little.

ramesh sadasivam said...

Thank you Sir. Happy to see people who agree with this. I am okay with comments in English. Thank you very much sir.

Jeevan said...

The breakup gives way to terrorism, it should not happen ever.

ramesh sadasivam said...

True Jeevan. Thanks.