
எம். எஃப். ஹுசைன் வரைந்த நிர்வாண ஒவியங்கள் கலை அம்சம் என்றும் அப்படிப் பட்ட ஓவியங்கள் ஏற்கனவே நிறைய இருக்கின்றன என்றும் அவை கோவில்களில் கூட இருக்கின்றன என்றும் கூறி அவரின் கீழ்த் தரமான செயலை நியாயப் படுத்தியிருக்கிறது உச்ச நீதி மன்றம்.
நிர்வாணம் குற்றமென்று யாரும் சொல்லவில்லை. அவை கோவில்களில் இல்லை என்றும் யாரும் சொல்லவில்லை. கோவில்களில் இருக்கும் நிர்வாணச் சிற்பங்கள் எந்த நபரையும் குறிப்பிடுவன அல்ல. ஒரு குறிப்பிட்ட நபரை நிர்வாணமாக வரைந்து அதை பலர் முன் பகிரங்கப் படுத்தினால் அந்த நபரை நேசிப்பவர்களின் உள்ளம் புண்படாதா? அப்படி மனம் புண்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டால் அவர்கள் உணர்வுகளை பாதுகாக்க வேண்டியது உச்சி மன்றத்தின் கடமையல்லவா? எம்.எஃப் ஹுசைன் நிர்வாணப் படுத்தியது யாரையோ அல்ல. கோடிக் கணக்கான இந்துக்கள் தாயென கருதி வழிபடும் தெய்வங்களை. அவர் வரைந்த ஓவியங்களில் குற்றம் இல்லை என்று சொல்பவர்களைப் பார்த்து கேட்கிறேன். உங்கள் வீட்டுப் பெண்களை எம்.எஃப். ஹுசைன் நிர்வாணப் படுத்தியிருந்தாலும் இதையே தான் சொல்வீர்களா? அதை கலையென கருதி ரசித்து பலரையும் ரசிக்க வரவழைப்பீர்களா?
நாம் பல்வேறு நம்பிக்கைகள் உடைய மக்கள் கொண்ட நாட்டில் வாழ்கிறோம். இங்கே நாம் அமைதியாக வாழவேண்டும் என்றால் மற்றவர் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, மற்றவர் நம்பிக்கைகளை புண்படுத்தாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் நாம் பண்பாடுடையவர்கள் என்பதற்கான சான்று. அப்படி பண்பாடின்றி நடந்துகொள்பவர்களை கண்டிப்பதும் தேவைப்பட்டால் தண்டிக்கவும் தான் நீதி மன்றங்கள் அமைக்கப் பட்டன.
அப்படி அமைக்கப் பட்ட நீதி மன்றங்களின் தலைமையாக திகழும் உச்ச நீதி மன்றம் இந்த முறை தன் கடமையை செய்ய தவறி விட்டது என்பதை மிகுந்த வருத்தத்தோடு இங்கே பதிவு செய்கிறேன்.
4 comments:
//ஒரு குறிப்பிட்ட நபரை நிர்வாணமாக வரைந்து அதை பலர் முன் பகிரங்கப் படுத்தினால் அந்த நபரை நேசிப்பவர்களின் உள்ளம் புண்படாதா? //
யாரை நிர்வாணமாக வரைந்து இருக்காரோ அவர்களுக்கு தான் கோபம் வர வேண்டும். அப்படி அந்த நபருக்கு கோபம் வரவில்லை என்றால் தப்பான நபரை நேசித்ததற்கு வருத்தம் தான் வர வேண்டும். அவர்கள் உயிருடன் இல்லை என்றால் மட்டுமே நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கலாம்.
சரி. எம்.எஃப். ஹுஸைன் போல கடவுள் படங்களை கொச்சைப் படுத்தினால் யார் குரல் கொடுக்க வேண்டும்?
கடவுள் படங்களை கொச்சை படுத்தினால் நம் ஆளுங்க(பி.ஜெ. பி., ஆர். எஸ், எஸ்) சும்மா இருப்பாங்களா? பல பேர் ஓன்று சேர்ந்தால் எம்.எஃப். ஹுஸைன் மேல் கேஸ் எதுக்கு??? தீர்ப்பு நாமே தரலாமே???
சரியாப் போச்சு. சட்டத்தை நம்ம கையில எடுத்து.... கலவரத்தைத் தூண்டவா?
Post a Comment