நேற்று உலக நாயகன், பத்மஸ்ரீ, டாக்டர் கமலஹாசன் அவர்கள் நடித்து வெளியாகியிருக்கும் பொன் விழா படைப்பான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் பார்த்தேன்.
'A WEDNESDAY' என்கிற ஹிந்தி திரைப்படத்தை தமிழ்ப் படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்ப்படுத்துவதோடு நிற்காமல் கதை திரைக்கதை வசனம் நடிப்பு என மூலத்தில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் படுத்தோ படுத்தென்று படுத்தியிருக்கிறார்கள்.
நீதித் துறையின் வேகத்தைக் கண்டு பொறுமையிழந்த ஒரு பொது மனிதன் தன் சாமர்த்தியத்தால் குற்றம் இழைத்த நால்வருக்கு தணடனை தர முடிவு செய்து, அதை வெற்றிகரமாக எப்படி நிறைவேற்றுகிறான் என்பதை சொல்வது தான் திரைக்கதையின் நோக்கம்.
இந்தியில் இதை ஏற்கனவே எந்தவித குறைகளும் இன்றி, பார்ப்பவர்களின் நாடி நரம்புகள் யாவும் முறுக்கேறும் விதமாக தொய்வில்லாமால் செய்திருந்தார்கள்.
அதே திரைக்கதையில் தன் புத்திசாலித்தனத்தை கலந்து (ஹி ஹி... அப்படித் தான் கமல் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்) நல்ல திரைக்கதையில் பல ஓட்டைகளைப் போட்டு, பார்ப்பவர்களை முந்திரிகளும் மிளகும் கலந்த பொங்கலை ஒரு வெட்டு வெட்டிய பின் ஏற்படும் ஒரு மந்த நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்.
உதாரணம் டாக்டர் கமல் அவர்கள் வெற்றுப் பைகளை பேரூந்திலும் ரயிலிலும் வைத்து விட்டு காவல் துறை ஆணையரிடம் நகரத்தின் பல்வேறு இடங்களில் வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்வது. பொய் சொல்வதென்று ஆன பிறகு, வெற்றுப் பைகளை அங்கும் இங்கும் வைக்காமலேயே வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்லலாமே?
காவல் நிலையத்தில் வெடி குண்டு வைக்கும் பொழுது நஸ்ருதின் ஷா லாவகமாக எந்த பதட்டமும் இல்லாமல் வைத்து விட்டு திரும்புவார். அதைப் பார்ர்கும் பொழுது காவல் துறையினர் எவ்வளவு அசிரத்தையாக இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும். கமல் அவர்களோ பையை எங்கே வைக்கலாம் என ஒரு பட்டிமன்றமே நடத்துகிறார். காவல் துறையினரின் ஓட்டைகளை புரிந்து கொண்டு நல்ல திட்டமிடலோடு அவர்களோடு விளையாட நினைக்கும் ஒருவர் எதற்காக ஒரு பையை மறந்து வைப்பது போல மறந்து வைத்து விட்டு வர அப்படித் தடுமாற வேண்டும்?
ஹாரிஃப் கமல் இருக்கும் கட்டிடத்திற்கு கமல் இருக்கக் கூடும் என கருதி தேட வருவார். அவ்வளவு தூரம் வந்தவர் ஓரே ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்க மறந்து விட்டு எதற்காக யாரும் அங்கு இல்லை என முடிவு செய்ய வேண்டும்? 'Do not disturb' என்று எழுத்துக்களை பார்த்து கீழ்படிந்து விட்டாரா? மூலத்தில் ஹாரிஃப் வேறு கட்டடத்தில் தேடுகிறார் என்று நமக்கு புரிய வைத்திருப்பார்கள். உலக நாயகன் அவர்கள் தொலை நோக்கு கருவி வழியாக ஹாரிஃபை தலைக்கு மேலிருந்து பார்க்கிறார். ஆனால் ஹாரிஃப் அந்த ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்காமலே அங்கு யாரும் இல்லை என முடிவு செய்து விடுகிறார்.
மூன்று தீவிரவாதிகள் ஜீப்பில் அமர்ந்திருக்கும் பொழுது வரும் அழைப்பை சந்தானபாரதி எடுத்து பேச முயற்சிக்கும் பொழுது அவர் ஆள்காட்டி விரலில் அவர் ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளொடு தொடர்பு வைத்திருந்து சிறை சென்றவருக்கு யார் ஓட்டுரிமை கொடுத்தார்கள்?
கடைசியில் கமல் மோகன்லால் சந்திக்கும் இடத்தில் போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் தான் மோகன்லால் காவல் துறையை சேர்ந்தவர் என்பதே கமலுக்கு தெரிகிறது. அதுவும் வந்திருப்பது காவல் ஆணையர் என்பது ஆணையரே தன்னை அறிகமுகம் செய்த பிறகு தான் கமலுக்கு தெரிகிறது. கூகிளில் தேடி வெடிகுண்டு செய்ய தெரிந்தவருக்கு நகரத்தின் காவல் ஆணையரின் முகம் தெரியாததற்கு என்ன காரணமோ?
மூலத்தில் நஸ்ரூதின் ஷா அனுபம் கேர் இடையே நடக்கும் உரையாடல்களில் எந்த ஒரு மதமும் மத நம்பிக்கைகளும் தாக்கப்படுவதில்லை. தமிழில் வழக்கம் போல கமலஹாசன் இந்து மதத்தை தாக்குவதை திறம்பட செய்திருக்கிறார். மத துவேஷத்திற்கு எதிரானவராக தன்னை காட்டிக் கொள்ளும் கமலஹாசன் அவர்கள் பேசும் வசனங்களை மத துவேஷத்தை வளர்க்கும் விதமாகவே இருக்கிறது. உதாரணம், "நீ இந்துவா?" என்று மோகன்லால் கேட்கும் இடத்தில். "அந்த கும்பலோடு என்னை சேர்க்காதீர்கள்" என்று சொல்லி இந்து மதவெறியர்கள் செய்த சில குற்றங்களை முன்னிறுத்துவார். முஸ்லிம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல என்று வசனம் வைக்க தெரிந்த கமலஹாசனுக்கு இந்துக்கள் எல்லாரும் மத வெறியர்கள் அல்ல என்பது ஏனோ விளங்குவதில்லை. இதில் கரம்சந்த் காந்தியின் ரசிகன் என்று வேறு சொல்லிக் கொள்கிறார். காந்தி இரண்டு கைகளிலும் எழுதுவார் என்பது தெரிந்தவருக்கு அவர் ஒரு இந்து என்பதும் , அனுதினமும் ராம நாமம் ஜபித்தவர் என்பதும் ஏனோ இன்று வரை தெரியாமலேயே இருக்கிறது.
'A WEDNESDAY' திரைப்படத்தின் அழகே நஸ்ரூதின் ஷா, தான் எந்த மதம் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் வந்து செல்வது தான். ஆனால் தமிழில் கமல் ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் என்பதற்கு பல்வேறு விதங்களில் கோடி காட்டியிருக்கிறார். உதாரணம் அவர் மொட்டை மாடியில் நிற்கும் பொழுது அவர் குரலில் ஒலிக்கும் பாடல். அவர் வைத்திருக்கும் தாடி ஆகியவை.
இது போல இந்தியில் உள்ள பல அழகான விஷயங்களை தமிழில் கொண்டு வர தவறி விட்டார்கள். உதாரணம் அவ்வப்பொழுது நஸ்ரூதின் ஷா, "என் மனைவி இப்பொழுதெல்லாம் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்னை அழைத்து நான் சாப்பிடேனா? டீ குடித்தேனா? என்றெல்லாம் அவ்வப்பொழுது விசாரிக்கிறாள். உண்மையில் நான் சாப்பிட்டேனா என்பதை தெரிந்து கொள்ள அவளுக்கு ஆர்வமில்லை. அவளுக்கு பயம் வந்து விட்டது. அங்கங்கே குண்டு வெடிக்கிறதே,அவற்றில் நான் சிக்கியிருப்பேனோ என்கிற பயம் அவளுக்கு" இந்த வசனத்தில் தான் அந்த படத்தின் ஜீவ நாடியே இருக்கிறது. அதை கோட்டை விட்டார்கள். அதே போல நஸ்ரூதின் ஷாவுடன் ரயிலில் பயணிக்கும் பெயர் தெரியாத இளைஞன், தன் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டும் காட்சி. இதையும் கோட்டை விட்டார்கள். இப்படி இன்னும் பல காட்சிகள்.
இப்படி நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு, கலைஞர் குரலில் வேறு பேசி வெறுப்பேற்றுகிறார்கள். சில லட்ச உயிர்கள் சேதமடையக் கூடிய நிலையில் ஆக வேண்டிய காரணங்கள் என்னவென்று காவல் ஆணையரிடம் விசாரிக்காமல் கிருஷ்ணரைக் கூப்பிடாமல் தமிழ்க் கடவுள்களைக் கூப்பிடும் படி பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார், முதல்வர் அவர்கள். முதலவரின் உண்மையான முகத்தை பதிவு செய்யும் முயற்சியா?
மூன்று தீவிரவாதிகளையும் கொன்ற பிறகு நஸ்ரூதின் ஷா பேசும் வசனங்கள் எந்த ஒரு பொது மனிதனும் பேசக் கூடிய பொதுவான வசனங்கள். அவர் சொல்லும் காரணங்கள் மதச்சார்பற்றவை. அவருக்கு தீவிரவாதிகள் மீது தான் கோபம் இருந்தது. அதனால் தீவிரவாதிகளை கொல்ல திட்டமிட்டார். கமலஹாசன் அவர்கள் கோபமெல்லாம் இந்து வெறியர்கள் மீதிருக்க ஏனோ இவரும் தீவிரவாதிகளையே கொல்ல முடிவு செய்திருக்கிறார்.
நஸ்ரூதின் ஷா ஒரு இந்தியராக இருந்து தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு பொது மனிதனாக இருந்ததனால் என்னால் அவர் கதாபாத்திரத்தொடு என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது.
உன்னைப் போல ஒருவன் என்று பெயர் வைத்துவிட்டு, என்னைப் போல இந்து இஸ்லாமிய ஒற்றுமையை மேம்படுத்த கடந்த கால குற்றங்களை பேசி பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும் என நினைக்காமல்
இந்து நம்பிக்கைகளையும் இந்துக்களையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்லி மத துவேஷத்தை வளர்க்க முயற்சி செய்திருப்பதால் உன்னைப் போல் ஒருவன் என்னைப் போல இல்லை.
13 comments:
Konuta anna! Really Superb review.
I haven't watched the film, yet with our Universal Hero has protagonist we expect such things(e.g. attack on hindus).
But by watching A wednesday I was simply blown away!! It's pity that Kamal hadn't made a remake aka copy properly :-)
Anyways, thanks for the review!
thanks mani :)
கூர்மையான நோக்கில் உங்கள் கண்ணோட்டம் சரியே...சரி விடுங்க கதைக்கு காதில்லை...
நன்றி தமிழரசி. உண்மை தான்... கதைக்கு காதில்லை.... :)
Nalla review. I was really thinking in the same line. Especially -Nashrudin shah's wife dialogue. Thats the truth. Lot of things were missed out in the movie. Heroism was too much for this movie which is not at all needed. Keep writing.
Thanks Thozhi. Yeah, you are right. Too much heroism. Unnecessarily.
//உன்னைப் போல ஒருவன் என்று பெயர் வைத்துவிட்டு, என்னைப் போல இந்து இஸ்லாமிய ஒற்றுமையை மேம்படுத்த கடந்த கால குற்றங்களை பேசி பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும் என நினைக்காமல்
இந்து நம்பிக்கைகளையும் இந்துக்களையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்லி மத துவேஷத்தை வளர்க்க முயற்சி செய்திருப்பதால்//
இது வழக்கமாக, so called, செக்யூலரிஸம் என்று சொல்லி அலையும் ஜந்துக்கள் செய்வது தான். கமல்...???!!! சொல்லவே வேண்டியதில்லை.
//ஹாரிஃப் கமல் இருக்கும் கட்டிடத்திற்கு கமல் இருக்கக் கூடும் என கருதி தேட வருவார். அவ்வளவு தூரம் வந்தவர் ஓரே ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்க மறந்து விட்டு எதற்காக யாரும் அங்கு இல்லை என முடிவு செய்ய வேண்டும்?//
ஆரிப் இன்னொரு கட்டிடத்தில் தான் தேடுகிறார். கமல் அதனை தான் இருக்கும் கட்டிடத்தில் இருந்து தொலை நோக்கி உதவியுடன் பார்த்து தெரிந்து கொள்கிறார் என்று நினைக்கிறேன்.
//உதாரணம் அவர் மொட்டை மாடியில் நிற்கும் பொழுது அவர் குரலில் ஒலிக்கும் பாடல். அவர் வைத்திருக்கும் தாடி ஆகியவை.//
அவர் மனைவி, "இன்ஷா அல்லாவா?" என்று கேட்கும் இடத்திலும்.
கண்டிப்பாக உ.போ.ஒ A Wednesday-உடன் பக்கத்தில் கூட வராது...
"Kamal is Good...but not the Best" ;)
//ஆரிப் இன்னொரு கட்டிடத்தில் தான் தேடுகிறார். கமல் அதனை தான் இருக்கும் கட்டிடத்தில் இருந்து தொலை நோக்கி உதவியுடன் பார்த்து தெரிந்து கொள்கிறார் என்று நினைக்கிறேன்.//
உறுதியாக சொல்ல முடியவில்லை அப்படித் தானே?
ஹிந்தியில் ஆரிஃப் மாடி மீது ஏறி வரும் பொழுது நஸ்ரூதின் ஷா என்ன சத்தம் என்பது போல பார்ப்பார். பின் சத்தத்திற்கு காரணம் பூனை என்று காட்டியிருப்பார்கள்.
தமிழில் சத்ததை கேட்டுத் தான் கமல் பதட்டமாகி துப்பாக்கியையும் தொலை நோக்கு கருவியையும் எடுப்பார். அவர் அதன் வழியாக பார்க்கும் கோணம் ஆரிஃப் தலைக்கு மேல் தான் இருக்கும். வேறு கட்டிடமாக இருக்க வாய்ப்பு ரொம்ப குறைவு. கமல் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
"Kamal is Good...but not the Best" ;)
உண்மை தான்.
Excellent observations!
You are absolutely right in mentioning about the way Kamalhasan puts down the Hindus.
I think he had tried to get into the good books of a few people and not bothered about the crux of the story. Just unlike Kamal.
Yeah That's right Ram, Very much Unlike the Kamal of Kuruthipunal... or Hey Ram...
//அதே திரைக்கதையில் தன் புத்திசாலித்தனத்தை கலந்து (ஹி ஹி... அப்படித் தான் கமல் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்) நல்ல திரைக்கதையில் பல ஓட்டைகளைப் போட்டு, பார்ப்பவர்களை முந்திரிகளும் மிளகும் கலந்த பொங்கலை ஒரு வெட்டு வெட்டிய பின் ஏற்படும் ஒரு மந்த நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்.//
ஏன் இப்படி? பெரும்பாலும் அதே திரைக்கதை... வசனம் முதற்கொண்டு தமிழாக்கியிருந்தார்கள். இதில் ‘புத்திசாலித்தன’ தவறுகளை கண்டுபிடிக்க ஏன் இப்படி பிரயத்தனப் படுகிறீர்களோ... :(
//வெற்றுப் பைகளை அங்கும் இங்கும் வைக்காமலேயே வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்லலாமே?//
இதுவும் Wednesdayல் இருக்கும் காட்சியே. கடைசி காட்சியில் நடக்கும் உரையாடலும் அப்படியேத்தான் இருக்கும்.
ஒரிஜினல் கதைப் படி அவை வெற்றுப் பைகள் இல்லை. வெடிகுண்டுகள் இல்லாத பைகள் அல்லது வெடிக்காத குண்டுகள் இருக்கும் பைகள். தீவிரவாதிகளின் தொடர் வெடிகுண்டு தாக்குதலினால் கோபப்படும் ஒரு மும்பைவாசி அதே வழியில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கிறான். முதலில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திருக்கிறேன் என்று மிரட்டல் விடுவதற்கு தோதாக பைகளை வைக்கிறான். அந்த போலிஸ் ஸ்டேஷனில் வைத்த பையும் அப்படிப்பட்ட குண்டு (வெடிக்காத) இருக்கும் பைதான். அப்பொழுதுதான் போலிஸ் துறையை நம்பவைத்து தன்னுடைய கோரிக்கைக்காக ப்ளாக் மெய்ல் செய்ய வைக்க முடியும் என்பதால் அந்த திட்டம். சரி... போலிஸ் சரியான நேரத்தில் அந்த பையை கண்டுபிடிக்க முடியாமல் போனால்? திட்டம் ஃபெயில் ஆகியிருக்கும். ஆனால் கதைப்படி அந்த சாமானியனுக்கு ஏதுவாக திட்டம் சக்ஸஸ் ஆகிவிடுகிறது.
//கமல் அவர்களோ பையை எங்கே வைக்கலாம் என ஒரு பட்டிமன்றமே நடத்துகிறார். //
யதார்த்தமாக கழிப்பறையில் நுழைந்து பையை வைக்கும்போது அங்குமிங்கும் பார்ப்பதில் என்ன குறை கண்டீர்களோ? நஸ்ருதீன் நேரடியாக வைத்துவிட்டார் என்பதினால் அந்தக் கதையில் என்ன நம்பத்தன்மை அதிகரித்து விட்டது?
நீங்களே பலமுறை ரிகர்சல் செய்த விஷயத்தை அந்த நேரத்தில் நிகழ்த்தும்போது சட்டென தடுமாற்றம் ஏற்படும். இது ஒரு சாதாரண நடைமுறை வாழ்க்கை யதார்த்தம்.
//தொலை நோக்கு கருவி வழியாக ஹாரிஃபை தலைக்கு மேலிருந்து பார்க்கிறார். //
அதுதான் தொலைநோக்கு (Monocular) கருவி எனத் தெரிகிறதே. அடுத்த கட்டிடத்தில் இருக்கும் ஆரிஃப்கானை அவர் பார்க்கிறார் என்று தெளிவாகவே தெரிகிறது. இதிலும் ‘புத்திசாலித்தன குளறுபடி’ என்று நீங்கள் குற்றம் சாட்டினால் அதற்கு என்ன செய்வது?
//அவர் ஆள்காட்டி விரலில் அவர் ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருக்கிறது. //
அவர் சட்டையில் காலர் ஓரத்தில் சாம்பார் கறை கூடத்தான் இருந்தது. யார் அவருக்கு அன்றைக்கு காலை சாம்பார் இட்லி வாங்கி கொடுத்தது என்று கேட்பீர்கள் போல?
விரலில் இருந்தது ஓட்டு மைக்கறை என்று நீங்களாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அது ஏன் மச்சமாகவோ, தோல் தேமலாகவோ இருக்கக் கூடாதா?
கவனக்குறைவாக சந்தானபாரதி ஓட்டுப் போட்ட கையோடு நடிக்க வந்துவிட்டார் என்றே வைத்துக் கொண்டாலும் அது கதையில் என்னவகை குறைபாடு ஏற்படுத்தி இருக்கிறது? அடப் போங்கப்பா.....
//உதாரணம், "நீ இந்துவா?" என்று மோகன்லால் கேட்கும் இடத்தில். "அந்த கும்பலோடு என்னை சேர்க்காதீர்கள்" என்று//
மோகன்லால் கேட்பது ‘நீ இந்துத்வாவா’ என்ற கேள்வி. அதாவது இந்து அடிப்படைவாதியா என்பது அதற்கு அர்த்தம். ஒட்டுமொத்த இந்துக்களை எல்லாம் கேலி செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
//கூகிளில் தேடி வெடிகுண்டு செய்ய தெரிந்தவருக்கு நகரத்தின் காவல் ஆணையரின் முகம் தெரியாததற்கு என்ன காரணமோ?//
மூலத்திலும் அந்த சந்திப்பு அப்படித்தானே நிகழ்கிறது. உங்கள் கூற்றின்படி //இந்தியில் இதை ஏற்கனவே எந்தவித குறைகளும் இன்றி, // என்றால் இந்தக் காட்சியில் கமல் செய்த புத்திசாலித்தன தவறு என்னவோ?
லத்திகா சரண் கூடத்தான் பல தடவை பேப்பர்களில் ஃபோட்டோ பார்த்திருக்கிறீர்கள். திடீரென அவர் உங்கள் வீட்டு கார் பார்க்கிங்கில் வந்து கை கொடுத்தால் ‘யார் அது’ என்றுதான் பார்ப்பீர்கள். உடனே ‘மேடம்... நீங்க லத்திகா சரண், டிஐஜிதானே’ என்று கேட்டுவிட மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் அவரை அங்கே எதிர்பார்க்கவில்லை. அங்கு நீங்கள் உங்கள் அண்டை வீட்டுக்காரரைத்தான் பெரும்பாலும் எதிர்பார்ப்பீர்கள். அறிமுகமாகி நல்ல பழக்கமான பிறகுதான் ‘மேடம்... நீங்க அசப்பில் லத்திகா சரண் போலவே இருக்கீங்க’ என்று சொல்வீர்கள். இதையேதான் The Wednesday படக் கதையும் காட்டுகிறது.
//தன் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டும் காட்சி. இதையும் கோட்டை விட்டார்கள். இப்படி இன்னும் பல காட்சிகள்.//
அது நடைபெறுவது மும்பையில். அங்கே அடிக்கடி நிகழும் வெடிகுண்டு வெடிப்புகள் பின்புலம். இந்தக் கதை நடப்பது சென்னையில். இங்கு வெடிகுண்டு வெடிப்புகள் இல்லை. அதனால் அப்படிப்பட்ட சமரசங்கள் தேவையானது. அதனால்தான் குஜராத் கலவரத்தைப் பற்றிய நீண்ட வசனம் வருகிறது.
//கமலஹாசன் அவர்கள் கோபமெல்லாம் இந்து வெறியர்கள் மீதிருக்க ஏனோ இவரும் தீவிரவாதிகளையே கொல்ல முடிவு செய்திருக்கிறார்.//
நஸ்ருதீன் ஷா நடித்ததாலேயே அந்த காரெக்டர் செக்யூலராக ஆகிவிட்டது. ஆனால் ஒரு சென்னைவாசிக்கு என்ன கோபம் இருக்க முடியும் என்பதை ஜஸ்டிஃபை செய்வது போல அமைந்தத காட்சிதான் கமல் இறுதியில் பேசும் அந்த வசனம்.
உண்மை. அந்தக் காட்சி A Wednesday போல உணர்ச்சிமயமாக வரவில்லை. ஏனென்றால் நமக்கு கமலின் நிஜ அரசியல் சார்பு, அவர் மதம், சாதி என்று பல விஷயங்களும் மனதில் குறுக்கே ஓடிக் கொண்டேயிருக்கிறது. நஸ்ருதீன் பற்றி அதிகம் தெரியாத போது அந்தக் காட்சி இயல்பானதாக ஆகி விடுகிறது.
அதனால்தான் இந்தப் படம் வந்தபோதே நான் சில பதிவுகளில் எழுதிய கமெண்ட் - ‘இந்தக் கதை மும்பைக்கு என்று ஸ்பெஷலாக எழுதப்பட்ட கதை. இதை சென்னை பின்புலமாக வைத்து எடுத்தது மிகப் பெரிய தவறு. ஒட்டாமல் போய்விட்டது.’
மற்றபடி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் என்பதில் எந்தளவும் மாற்றுக் கருத்தில்லை.
விரலில் இருந்தது ஓட்டு மைக்கறை என்று நீங்களாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அது ஏன் மச்சமாகவோ, தோல் தேமலாகவோ இருக்கக் கூடாதா?
ஓ... வைத்துக் கொள்ளலாமே.... :)
கமல் எந்தத் திரைக்கதையையும் வெளிநாட்டுத் திரைப்படங்களில் இருந்து உருவுவதில்லை என்றும் அவர் உண்மையாகவே வெளிநாட்டு விருதுகள் மேல் ஆசையில்லாததால் தான் தன் திரைப்படங்களை வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.
// மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் என்பதில் எந்தளவும் மாற்றுக்
கருத்தில்லை.//
இங்கே மாற்றுக் கருத்து சொல்வது நானல்ல. :)
Post a Comment