Monday, August 3, 2009

முயற்சிகள் தொடர்கின்றன.என் முந்தைய பதிவைப் படித்துவிட்டு தாங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த ஆதரவுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் இவ்வளவு தூரம் முயற்சி செய்தும், பல்வேறு தளங்களில் புகார் செய்தும் இன்னும் பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இரு காவலர்கள் எங்கள் மேன்சனுக்கு வந்தார்கள்.

வாட்ச்மேனிடம், "உங்க ஓனர வரச் சொல்லு" என்றார்கள்.

நான் சத்தம் கேட்டு வெளியே வந்தேன்.

என்னைப் பார்த்தவுடன். "வா தம்பி. உன் கதையா தான் வந்திருக்கோம். இப்படி போலீஸ் மானத்த வாங்கி வச்சிருக்கியே, இது உனக்கே நல்லா இருக்கா? நாங்கள்லாம் யாருக்காக ராத்திரி பகலா கண்ணு முழிக்கிறோம். உன்ன இவுங்க அடிச்சா யாரு கிட்ட சொல்லுவ? எங்ககிட்ட தானே வரணும்?"

ஜூன் ஐந்தாம் தேதி நான் மிரட்டப்பட்ட பொழுது இவர்களிடம் தானே சென்றேன்?

அவர் தொடர்ந்தார், "செருப்பு கால கடிச்சா கழட்டி எறின்னா.. கேக்க மாட்டேங்கிற! சரவணா மேன்ஷனையே தல கீழா மாத்தப் போறீயா. மெட்ராஸ்ல வேற மேன்ஷனே இல்லையா?"

"எனக்கு வேற மேன்ஷன் கிடைக்கும் சார். ஆனா இங்க நூறு பேர் அதே அசிங்கத்துல கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க!"

"வேண்டாம். உங்கிட்ட பேசுனா. நீ இதயும் போடுவ. நீ கெளம்பு. நான் உங்க ஓனர தான் பாக்க வந்தேன்"

அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வீணாக்கலாமா? அது தான் அதையும் போடுகிறேன். :)

வாட்ச்மேன் அதற்குள் ஓனர் வீடு வரை சென்று திரும்பி இருந்தார். காவலர்களிடம், "சார், ஓனர் ஊர்ல இல்லை" என்றார்.

"யோவ். அந்த ஆள பத்தி எங்களுக்கு தெரியாதா? அவன் உள்ள இருந்துகிட்டே இல்லனு சொல்வான்யா. " என்றவர், தன்னோடு வந்த காவலரிடம், "வா போய் வீட்ல ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்" என்று சொன்னார்.

அத்தோடு முடிந்தது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை.

மாநகராட்சியில் இருந்து இரண்டு முறை வந்து சென்றார்கள்.

அவர்கள் வரும் பொழுதெல்லாம் நாராயணன் அவர்கள் தலையை வெளியே காட்டுவதேயில்லை. அவர் வெளியூரில் உள்ள தன் மகளின் வீட்டில் தங்கியிருப்பதாக விடுதியில் தங்கியிருக்கும் நண்பர் ஒருவர் கூறினார்.

இன்னிலையில் பொது நல ஆர்வலரும் அக்னி சுடர் பத்திரிக்கையின் நிறுவனருமான திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பிற்கு உதவிய ஜீவன், இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அக்னிச் சுடரில் வெளியான செய்தியும் அந்த தளத்தில் உள்ளது. அங்கே செல்ல.

திரு.டிராஃபிக் ராமசாமி அவர்கள் சுகாதார அதிகாரியை கைப் பேசியில் தொடர்பு கொண்டு, பொய் சான்றிதழ் வழங்கிய சுகாதார ஆய்வாளர் குறித்து கேள்வி எழுப்பினார்.

"அவர் யார் இவங்கள காலி பண்ண சொல்றதுக்கு? தண்ணியே எடுத்துட்டு போகாம, தண்ணி நல்லாருக்குன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கார்.? "

மறுமுனையில் சொல்வதை கொஞ்சம் நேரம் மௌனமாக கேட்டார். பிறகு, "சரி, இப்ப பையன தண்ணியோட வரச் சொல்றேன். டெஸ்ட் பண்ணிப் பாருங்க" என்றார்.

நான் தண்ணீரோடு சென்று சுகாதார அதிகாரியைப் பார்த்தேன். சுகாதார அதிகாரி மருத்துவர் குகானந்தம், பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்று சொன்னார். பரிசோதனையின் முடிவு எதுவாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடரக் கூடாது என்றும் சொன்னார். சான்றிதழ் இன்னும் ஓரிரு தினங்களில் வரும்.

கடந்த புதன் 29-072009 முதல் அந்த பம்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இது வெறும் சப்பைக் கட்டுத் தான். சூடு தணிந்தவுடன் மீண்டும் போடத் துவங்கிவிடுவார்கள்.

என் அப்பா குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சவுந்திரபாண்டியன் அவர்களை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார். திரு. சவுந்திரபாண்டியன் அவர்கள் மேயரை சந்திக்கும் படி ஒரு கடிதம் கொடுத்துள்ளார். மேயரை நாளை அல்லது மறுநாள் சந்திக்க முயற்சி செய்வேன்.

பிரச்சனைக்கான தீர்வு மிக எளிமையானது தான். அதை திரு.நாராயணன் அவர்களை செய்ய வைக்க எந்த அதிகாரியாலும் முடியவில்லை என்பது மிகவும் அவமானகரமான விஷயம். இத்தனை I.A.S , I.P.S அதிகாரிகள் இருந்தும் ஒரு நியாயமான கோரிக்கையை, அடிப்படையான ஒரு விஷயத்தை, நிறைவேற்றித் தர யாருமேயில்லை. (நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தவிர)


இதற்கெல்லாம் ஒரு முடிவு நீதி மன்றத்தில் தான் கிடைக்கும் என நினைக்கிறேன்.

நிற்க. நாம் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது. நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் அதை செய்யலாம்.

காவல் நிலையங்களில் புகார் கொடுக்க செல்லும் பொழுது பெரும்பாலும் காவல் அதிகாரிகள் புகாரை பதிவு செய்யாமலேயே தட்டிக் கழிக்கிறார்கள். இதனால் பல குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் போவதுடன், தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. இதனால் தவறான வழிகளை தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் இடையறாது அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் மக்களின் விழிப்புணார்வின்மையே ஆகும்.

நம் அறியாமையை போக்குவது நம் நண்பர்களான காவல் துறையின் வேலையல்லவா? அதனால் காவல் துறையே மக்களிடம் இது பற்றிய விழிப்பிணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை, வலைப்பதிவர்கள் சார்பாக நாம் எல்லோரும் சென்று காவல் ஆணையரிடம் ஒரு பொது நல கோரிக்கையாக கொடுக்கலாம். அந்த கோரிக்கை கீழ்க் கண்டவாறு இருக்கும்.

காவல் துறைக்கு வரும் எல்லா புகார்களுக்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும். அப்படி ரசீது கொடுப்பது தங்கள் கடமையென காவல் துறை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் ரசீது பெறுவது தங்கள் உரிமையென்பதை உணர்வதற்கான விளம்பரங்கள் வெளியிடப் பட வேண்டும். அப்படி புகாருக்கு காவலர்கள் ரசீது தராத பட்சத்தில் புகார் கொடுப்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை நாம் எல்லோரும் சேர்ந்து காவல் துறை ஆணையரிடம் கொடுக்கலாமா?

நிறைய பேர் சேர்ந்து புகார் கொடுத்தால் பொது நல புகார் என்பதால் நாளிதழ்களில் செய்தி வெளியாக வாய்ப்பிருக்கிறது. அப்படி செய்தி வெளியானால், அதுவே பலரிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதை உங்களில் யாராவது முன் நின்று ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்தை வரவேற்கிறேன். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் இதை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும். என்று என்பதை, விவாதித்து முடிவு செய்யலாம்.

30 comments:

S.A. நவாஸுதீன் said...

காவல் துறையே மக்களிடம் இது பற்றிய விழிப்பிணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை, வலைப்பதிவர்கள் சார்பாக நாம் எல்லோரும் சென்று காவல் ஆணையரிடம் ஒரு பொது நல கோரிக்கையாக கொடுக்கலாம்.

நல்ல யோசனைதான். ஊரில் இருக்கும் நண்பர்கள் இதையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

shri ramesh sadasivam said...

ஆதரவுக்கு நன்றி நவாஸுதீன்.

M Arunachalam said...

Sir,

I am amazed by your will power & courage of conviction. If only more people have similar courage like you have displayed, India would not have been driven down to such pitiable depths.

I pray to God to give you & others (including me) moral strength to stand our ground against oppression & misuse of authority.

My suggestion is why don't we try to make a e-petition to the Commissioner of Police or DGP so that many people can sign the same.

Arun

shri ramesh sadasivam said...

Dear Arunachalam,

Thanks for your appreciation and encouragement.

We will do that also. But many of us going in person is also must. Only then we can create some talk about this. When we send e-petition it won't be known to the outside world. Am I right?

Singa said...

You are right Ramesh. E Petition may spread the news to people who are all well educated and living beyond govt. usual normalities and procedures. But to create awareness, we should all join and make this news available to the common people who are all facing this govt. servants day to day life. So apart from e petition, all should join hands and create a mass news.

M Arunachalam said...

Mr. Ramesh,

I have a suggestion.

Apart from meeting the officials & submitting a petition, why don't we look at the option of filing a PIL to enforce that all police stations should mandatorily give an acknowledgment to a complaint to the complianant?

That will be a permanent solution I think.

Arun

shri ramesh sadasivam said...

Dear Sir, Thats a wondeful Idea. We need permanent solutions. How do we that? We will do it. Even if it takes some time.

shri ramesh sadasivam said...

I will discuss this with some public well wishers...

திரவிய நடராஜன் said...

அன்பு தம்பிக்கு,
வயதிலும் (உங்களுடைய அப்பா வயது எனக்கு இருக்கும்)இது போன்ற விஷயங்களில் அனுபவப்பட்ட சீனியர் என்ற முறையில் சில நடைமுறை உண்மைகளை கூற விரும்புகிறேன். விதிமுறைகள் மீறலுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருக்கும் நிலை ஒழிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. எப்படி ஒழிப்பது என்பதில் தான் தங்கள் கருத்திலிருந்து மாறுபடுகி றேன்.
இந்தப்பிரச்சனையை எப்படி அணுகுகிறீர்கள் என்பதை என்பதை நன்கு ஆலோசித்துக்கொள்ளுங்கள். அதாவது
(1) "இதில் சம்பந்தப்பட்ட மேன்ஷன் உரிமையாளர், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக் கை எடுக்கபட்டு தங்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும்" என்பதற்காக என்றால், உங்கள் நடவடிக்கையால் பலன் கிடைக்கப்போவதில்லை. காரணம் சிவில் நீதிமன்றத்திலும், கன்ஸ்சியூமர் கோர்ட்டிலும் உங்களுக்கு நியாயம் கிடைக்கும். ஆனால் வருடக்கணக்கில் நடக்கப் போகும் வழக்குக்கு, வக்கீல் பீஸ், கால விரயம், உங்கள் அலைச்சல் போன்றவைகளை ஒப்பிடும் பொழுது வழக்கில் நீங்கள் ஜெயிச்சாலும் மொத்தத்தில் உங்களுக்கு தோல்வியே!

(2) "இது ஒரு பொதுப்பிரச்சனை. யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது. அதனால் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக" என்றால் அதிலும் தோல்விதான். வழக்கில் ஜெயிக்கலாம். ஆனால் கோர்ட் உத்தரவை மதித்து செயல்படும் வழக்கம்தான் நம் நாட்டில் இல்லையே! எனவே அதிகாரிகள் திருந்தி விடுவார்கள் என்றும் அதனால் எதிர் காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் எப்படி எதிர்பார்க்க முடியும்?.

(3) " இது கௌரவ பிரச்சனை. என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துவிடுவது" என்பது உங்கள் முடிவாக இருந்தால், உங்கள் முயற்சி சரியானதுதான். உங்களை discourage செய்வதாக நினைக்கவேண்டாம். யதார்த்தத்தை புரிந்து கொள்ளத்தான் இந்த பின்னூட்டம்..

ஒரு முக்கியமான விஷயம். திரு அருனாச்சலம் கூறுவது போல உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரவேண்டிய அவசியமே கிடையாது. ஏற்கனவே உச்சநீதி மன்றம் ஒரு பொதுநல வழக்கு ஒன்றில் " எல்லா காவல் நிலையங்களிலும் பெறப்படும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, புகார்தாரர்களுக்கு ரசீது வழங்க வேண்டும். இது நடை முறை படுத்தப்படுகிறதா என்பதை கீழ் நீதி மன்றங்கள் கண்காணிக்க வேண்டும்" என மாநில உயர் நீதிமன்றங்களுக்கு அறிவுறை வழங்கியுள்ளது.

நச்சு செடியை அழிக்க அதை வேரோடு பிடுங்கவேண்டுமேயொழிய கிளையை வெட்டி பிரயோஜனம் ஒன்றும் கிடையாது. மறுபடியும் கிளை துளிர்க்கத்தான் செய்யும். ஊழல் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதை தடுக்காதவரை எதுவுமே செய்ய முடியாது. ஒரு பழமொழி சொல்லுவார்கள் " வாத்தியார் நின்னுக்கிட்டு ஒன்னுக்கு போனால் பையனும் அப்படித்தன் போவான்!" என்று
நானும் BSNL மீது கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஒன்றல்ல மூன்று வழக்குகள் தொடர்ந்து, வ்ழக்கறிஞர் இல்லாமல் நானே மனுத்தாக்கல் செய்து வாதாடி ஜெயித்தவன். மூன்று வருடங்கள்!. அந்த அனுபங்களை எனது பிளாக்கில் எழுத உள்ளேன்.
இந்த நீண்ட பின்னுட்டத்தை பொறுமையுடன் படித்ததிற்கு நன்றி. எதாவது ஆலோசனை தேவைப் பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

shri ramesh sadasivam said...

அன்புள்ள திரு திரவிய நடராஜன் அவர்களுக்கு, தங்கள் பின்னூட்டத்தில்லுள்ள யதார்த்ததை நான் உணராமல் இல்லை. இந்தப் போராட்டத்தின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். மேன்ஷனுக்கு வரும் அசுத்த நீருக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். இது நடந்தால் நான் வெற்றி பெற்றதாக கருதுவேன். இப்பொழுதே அந்த மோட்டாரை நிறுத்தி வைத்திருக்கிறார். அதற்குக் காரணம் இவ்வளவு தூரம் போராடியது தான். இன்னும் கொஞ்சம் ஒத்துழைத்தால் நிச்சயம் அதை செய்ய வைக்க முடியும். மற்ற படி நீங்கள் சொல்லும் நிரந்தர தீர்வு வர ஒவ்வொரு குடிமகனும் தன் உரிமைகள் கடமைகள் பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டும் தான் நிகழும். அதற்காக மற்றவர் செயல்படட்டும் என்று நாம் காத்திருக்க முடியாது இல்லையா? அதனால் என்னால் ஆன முயற்சியை செய்கிறேன். அவ்வளவு தான்.

இதில் முன் அனுபவம் உள்ளவர் என்பதால் நீங்கள் எனக்கு சில ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அது தொடர்பாக உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன். நன்றி. :)

தோமா said...

Ramesh,

WE CAN WIN.....

Thomas
Choolaimedu

shri ramesh sadasivam said...

thanks thomas.. :) you are close to our place..

Deepak said...

Ramesh,

If I were in your place, I probably wouldn't have had half the conviction or sustained effort in this matter. Congratulations - this account is inspiring. Especially, after being so much insulted at the police station [talk about them being your friend!], you have still maintained your dignity and just written a factual account of what happened.

Also, part of the reason why all of this is so effective in your case is that most of it is out in the open through your blog. The Internet is a useful device in that aspect. A few years ago, the common man wouldn't have had this privilege. Can I offer some suggestions on this regard?

1) Since this is a long term effort, this content might be better placed on a separate blog on its own

2) You can digitize all evidences [especially the water test sample results] and post them as images for everybody to view. It will be an eye opener for everyone on how appalling the situation is.

3) Those conversation snippets at the police station - you can upload them on YouTube and link that back to your blog post

4) You can create a separate time line post on your blog detailing events along with dates. This will be another eye opener on how long such a simple thing is taking.

Whatever be the case, I wish you all the best and hope something good comes out of this.

shri ramesh sadasivam said...

Dear Deepak,

Thanks and I sppreciate you for taking time to think about this and give useful suggestions.

You're right! The internet exposure has helped me a great deal in this. Because of this I got in contact with many people who wanted to help me genuinely.

I think I can put it up in twitter to keep the time line log.

You tube is a great idea, I'll do that.

Seperate blog is also a good idea, but I think I will use this blog for that purpose. Once this issue gets resolved I start writing about other stuff.

Thanks for you support. Keep in touch. Sorry for the late reply. :)

என் பக்கம் said...

நன்பரே இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்.

http://oviya-thamarai.blogspot.com/2009/08/2.html

நன்றி

Guru said...

அனைவரும் துணிவுடன் இது போன்ற செயல்களை எதிர்க்க துவங்கினால் தான் சமுகம் சரியாகும். உங்களின் தைரியமும் துணிவும் பாராட்டுதலுக்கு உரியது.

shri ramesh sadasivam said...

நன்றி குரு

Guru said...

வலைபதிவில் இருந்த போலீஸ் உரையாடையலைக் கேட்டேன். போலீஸ்காரரின் வார்த்தைகளின் உண்மைகளையும் உதாசீனப்படுத்துவதற்க்கில்லை. ஒரு வகையில் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்ணைக்காரன் காலில் விழுளாமே என தோன்றுகின்றது. சொல்லுகிற விதத்தில் சொன்னால் Owner கேட்பாரோ என்னமோ?

shri ramesh sadasivam said...

குரு, நீங்கள் நினைப்பது போல அல்ல. ஓனரிடம் நாங்கள் எவ்வளவோ மன்றாடியும் அவர் எந்த பிடியும் கொடுக்காததால் தான் நடவடிக்கை எடுத்தோம். முதல் ஐந்து மாதங்கள் நாற்றத்தை பொறுத்துக் கொண்டு தான் இருந்தோம். சான்றிதழ் கிடைத்தவுடன் கூட புகார் செய்யவில்லை. ஓனரிடம் அதைக் காட்டி, அவர் புரிந்து கொள்வார் என எதிர்பார்த்தோம்.

இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும்?

Sri said...

'Acceptance is an Asian Disease.'- Paul Theroux.
It is so good that you stand apart on this. good luck.
"Kodunkootrukkirayaena maayum pala vedikkai manidharai pol veezhvaen ena ninaithaayo?"- Bharathi
Just dont get discouraged on polished comments that try to ponder/question on what is the benefit of you doing this.
the benefit is so personal that those people cannot understand that.
Do what you believe.

shri ramesh sadasivam said...

Hi Sri,

Thanks for those beautiful quotes and encouraging comments!

Your right, the benefit is so personal. No one is able to understand!

And, Yes. I won't give up!

Cheers!

kvasan said...

First I welcome your diginity but, Can I tell you something? We all need to be united to change the current situation. Our political change only will gives the stop otherwise our grandson's will suffer 100 times more than we do.

Jai Hind.
http://keerthivasanth.blogspot.com

shri ramesh sadasivam said...

Yeah, Kerthivasan. It's obvious..are grandsons are going to suffer 100 times than us, if we don't change this.

I am doing my little bit for that not to happen!

tamil malar said...

உங்களின் இந்த பதிவு தமிழ் மலர் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
visit http://tamilmalarnews.com

shri ramesh sadasivam said...

மிக்க நன்றி. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

SK said...

இவ்வளவு நாள் ஆகியும் ஒன்றும் முடிவு இல்லையா ?? :(

shri ramesh sadasivam said...

அன்புள்ள SK,

அக்கறையோடு விசாரித்தமைக்கு நன்றி.

ஆச்சர்யம் ஆனால் உண்மை என்பது போல பிரச்சனை சரியாகிவிட்டது.
திரு.நாராயணன் பிரச்சனையை மூன்றே மணி நேரத்தில் கடந்த வெள்ளியன்று முடித்துவைத்தார். என்ன நடந்தது என்பதை விவரமாக ஒரு பதிவாக போடுகிறேன். மிக்க நன்றி.

Singa said...

Ramesh,

Its good to know things are getting well but I don't feel great since I wished we should have taken this as a "play card" to create awareness to all tenants in chennai hostels and warning signal to all owners in chennai hostel. It is not the one odd case in chennai. 9o % are the same. What happened is not our destination to reach once for all but a station to cross across... We should never satisfy ourselves..... And this is an example for all of us to learn the undying effort.... My heartiest Congrats too all who took effort for this and happy to see the power and responsibility of "Netizens.

Deepak said...

Ramesh,
Nice to know. Waiting for your update.

Also would like to know if you would continue to stay at that mansion or would prefer to move out now that the problem is fixed.

Congratulations - this will be a good lesson to all of us not to back out when we see that a problem is insurmountable.

I would request you to create a consolidated timeline post.

shri ramesh sadasivam said...

Dear Singa and Deepak,

Thanks for your encouraging support. I am glad about ur responses. Yes we must have make this as a warning. Anyhow we'll spread this news as much as possible.

I hope this will be a new beginning
towards an ideal nation.

Thanks.