Tuesday, August 19, 2008
ஒரு ஜீவனுக்கு மற்றோரு ஜீவன் தான் ஆகாரம்.
ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் ஸ்வாமிஜியின் உரையிலிருந்து.
"நீ ஒரு வாழைப்பழம் சாப்பிடும் பொழுது எத்தனை விதைகளை சாப்பிடுகிறாயோ அத்தனை உயிர்களை கொன்ற பாவம் உன்னை சேர்கிறது" என்றார் ஸ்வாமிஜி.
ஒரு வேளை விதைகளை நீக்க கூடிய பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என சொல்வார் என நினைத்தேன்.
அடுத்து "சோறு சாப்பிடும் பொழுது எத்தனை பருக்கைகளை சாப்பிடுகிறாயோ அத்தனை உயிர்களை கொன்ற பாவம் உன்னை சேரும் என்றார்."
'சரியாப் போச்சு இது வேலைக்கு ஆகாது' என்கிற நிலைக்கு நான் வந்து விட்டேன்.
"அதற்காக உணவருந்தாமல் இருக்க முடியுமா? உணவருந்தித்தான் ஆக வேண்டும். ஆகாரம் இல்லாமல் யாராலும் ஜீவிக்க இயலாது."
சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொன்னார். நினைவில்லை. அதன் அர்த்தம்...
"ஒரு ஜீவனுக்கு மற்றொரு உயிர் தான் ஆகாரம். அதனால் நாம் ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் ஒரு ஜீவனை உண்கிறோம் என்கிற நன்றி உணர்வோடு உண்ண வேண்டும். அதை இறைவனை அர்ப்பணம் செய்துவிட்டு உண்ண வேண்டும். அப்பொழுது அந்த பாவம் நம்மை சேராது" என்றார்.
இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது ஒன்றும் கடினமான காரியமில்லை. இறைவனை ஒரு முறை நினைத்து விட்டு உணவை உண்ண ஆரம்பித்தாலே போதும்.
இது அசைவ உணவை ஆதரிக்கும் கருத்தல்ல.
நான் அசைவ உணவை கைவிட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
அசைவ உணவு எடுத்துக் கொள்ளும் பொழுதும் தியானம் செய்திருக்கிறேன். என் அனுபவத்தில் அசைவ உணவு தியானம் கைகூடுவதை சிரமமாக்குகிறது.சைவ உணவுக்கு மாறிய பிறகு என் புத்திக் கூர்மை அதிகரித்திருப்பதை உணர்கிறேன். உடல் வலிமையில் எந்த குறையும் இல்லை. மாறாக உடல் லேசாகவும் மனம் எளிதில் சோர்விலிருந்து விடுபடுவதாகவும் இருக்கிறது.
பொருளாதார ரீதியாகவும் சைவ உணவு எடுத்துக் கொள்வது உலக உணவு பற்றாக்குறையை போக்க உதவும் என்கிறது ஓர் ஆய்வு.
சைவ உணவுக்கு நான் மாறிய கதை ஆங்கிலத்தில்.
சைவ உணவுக்கு ஆதரவான விவாதங்கள்.
மேலும்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//"அதனால் நாம் ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் ஒரு ஜீவனை உண்கிறோம் என்கிற நன்றி உணர்வோடு உண்ண வேண்டும். அதை இறைவனை அர்ப்பணம் செய்துவிட்டு உண்ண வேண்டும். அப்பொழுது அந்த பாவம் நம்மை சேராது"//
சாப்பிடும் போது காக்கா, குருவி, அணில், நாய், பூனை இப்படி விலங்குகளுக்கு கொடுத்துட்டு சாப்பிட்டா புண்ணியம் வர போகுது. புண்ணியம் இருக்கும் பொது பாவத்தை பத்தி ஏன் பேசுறிங்க????
ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்டுட்டீங்க. :)
புண்ணியம் சேர்வதும் , பாவம் சேர்வதும் தனி தனி விஷயம். புண்ணியம் சேர்வதால் பாவம் கழியாது.
ஆடு, அணிலுக்கெல்லாம் உணாவு போடறது புண்ணியம் சேர்க்க. சாப்பிடும் முன் இறைவனை நினைக்கறது பாவத்தைப் போக்க.
அத நான் பேசல, விட்டல் தாஸ் சுவாமி பேசுனது. :)
இறைவனை நினைத்தால் பாவம் போகும் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அன்பே சிவமனவன். நாம் பிறரிடம் அன்பு காட்டும் போதும், உதவி செய்யும் போதும் வெளிபடுபவன்.
மேலும் நாம் எவ்வளவு பாவ, புண்ணியங்களை செய்தாலும் அதன் பலன்களை அனுபவித்தே தான் ஆகவேண்டும். அது ஒரு நாளும் தானா போகாது. இறைவனை நினைத்தாலும் போகாது.
இறைவனை நினைத்தால் பாவம் போகுமா போகாதா என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம். எனக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை உள்ளது.
//எனக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை உள்ளது//
சரி வச்சுக்கோங்க. இப்ப யாரு வேண்டாம் ன்னு சொன்னா
நீங்க தான், "இறைவனை நினைத்தால் பாவம் போகும் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை." னு சொன்னீங்க
உங்கள ஒத்துக்க சொல்லியா இந்த பதிவ போட்டேன்?
Post a Comment