நண்பர் 1: ணா... எனக்கும் விரதமெல்லாம் இருக்கணும்னு ஆசை தான். சாப்பிடுகிட்டே இருக்க விரதம் ஏதாவது இருக்கா?
நண்பர் 2: இருக்கே.... மௌனவிரதம்!
நண்பர் 1: எது... இந்த பேசாம இருக்கணுமே அதுவா? அதுக்கு நான் சாப்புடாமலே இருந்துருவேனே...
நண்பர் 2. அப்ப பேசிகிட்டே இருக்க விரதம் ஒண்ணு இருக்கு ட்ரை பண்றீங்களா....
நண்பர் 1: என்னது ணா...
நண்பர் 2: சத்திய விரதம்...
நண்பர் 1: பொய் சொல்லாம இருக்கணுமா??? ணா... நான் நல்லவன் தான் ணா.. ஆனா உலகம் கெட்டு போய் கெடக்கே... இவிங்க கிட்ட பொய் சொல்லலனா வேல நடக்காதே...
நண்பர் 2: சரி... அப்ப ஏகபத்தினி விரதம் ட்ரை பண்றீங்களா...?
நண்பர் 1: ணா... ஹி ஹி ஹி... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புங்ணா....
நண்பர் 2: ஹ்ம்ம்ம்.... உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு :)
2 comments:
நேர்மை விரதம்..!!1???
நண்பர் 2: நீங்க நேர்மை விரதம் இருக்கலாம் போல இருக்கே
நண்பர் 1:
இருக்கலாங் ணா...ஆனா பாருங்க.. சாணக்கியர் என்ன சொல்றார்னா...நீ நேர்மையாக இருக்காதே...நாற்காலி மேசை செய்ய வீடு கட்டுபவர்கள்...நேரான மரங்களையே வெட்டுகிறார்கள்...
நண்பர் 2: அப்ப... நீங்க.. சாணக்கியர் ஆத்மாவ சாந்தி பண்ணாம விட மாட்டீங்க... நடத்துங்க நடத்துங்க....
:D
Post a Comment