
முதுகுத் தண்டை நேராக்கி
கண்களை மூடி அமர்கிறேன்
வெளி உலகம் மறைகிறது
என்னுள்ளே இப்பொழுது நான் மட்டும்
என்னைச் சுற்றி வெற்றிடம்
இருள் நிறைந்த வெற்றிடம்
உள்ளும் புறமும் சென்று வருகிறது காற்று
நெஞ்சுக்குள் நிறைகிறது நிம்மதி
இது போதும் இப்போது
இது போதும் எப்போதும்